தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அடுத்ததாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்புக்கு ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்ள தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஊர்க்குருவி என்ற படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா நடிக்க உள்ளதால் அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.