இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென் , பார்த்திபன், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். இத்திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு இந்த படம் வெளியானதால் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை. படத்திற்கு எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை.
ஆனால், அதன் பிறகு படம் ரீ-ரிலீஸ் ஆனவுடன் படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பிரமித்துபோய்விட்டனர். அப்போது கொண்டாடப்படவில்லை என்றாலும், இப்பொது படம் ரசிகர்களுக்கு மனதில் அழிக்கமுடியாத படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாகவும் இருக்கிறது.
இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களது சிறப்பான நடிப்பை படத்திற்காக கொடுத்திருப்பார்கள். இதனையடுத்து , படத்தில் ரீமா சென் நடித்த கதாபாத்திரம் பெரிதளவில் மக்களிடையே பேசப்பட்டது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் இல்லயலாம்.
முதலில் இந்த படத்தில் நடிக்கவிருந்தது, நடிகை சோனியா அகர்வால் தானம். ஒரு சில காரணங்களால், சோனியா அகர்வால் நடிக்க முடியாமல் போக அதற்கு பிறகு ரீமா சென்-க்கு வாய்ப்பு கிடைக்க அவர் நடித்தாராம் .
ஒருவேளை சோனியா அகர்வால் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் கூட வேற லேவலாக தான் இருந்திருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.