Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஏழாம் வகுப்பு மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய தலைமையாசிரியர்

ஏழாம் வகுப்பு மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுஹூன் மாவட்டத்தில் இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கேசவ் யாதவ். இவர் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது என்று சொல்லி ஏழாம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு வரவழைத்திருக்கிறார். அங்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்த மாணவி பள்ளியில் உள்ள இரண்டு ஆசிரியர்களிடம் இதுகுறித்து முறையிட்டு இருக்கிறார். அந்த ஆசிரியர்கள் மாணவிக்கு உதவி செய்யாமல் மாணவி குற்றம்சாட்டுவது குறித்து தலைமை ஆசிரியரிடம் சொல்லியிருக்கின்றார்கள்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் அந்த மாணவியை அழைத்து இதைப்பற்றி யாரிடமும் வெளியே சொன்னால் உன்னை படிக்க விடமாட்டேன் உன் படிப்பு வீணாக போய்விடும் என்று மிரட்டியிருக்கிறார்.

இதனால் என்ன செய்வதென்றே தெரியாத அந்த மாணவி மன உளைச்சலில் இருந்திருக்கிறார். மகள் ஏதோ மன உளைச்சலில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட தாய் என்ன பிரச்சனை என்று கேட்க, தனக்கு நேர்ந்த சம்பவத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தாய், குழந்தை உதவி எண் 10 98 க்கு போன் செய்துள்ளார். அதன்பின்னர் குழந்தைகள் நல குழுவினர் மாணவியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர் போலீசில் புகார் தெரிவிக்க, புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் அந்த தலைமையாசிரியர் மீது கல்வித்துறை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.