நீண்ட நாட்களாக காதலித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் உள்ள பிரைவேட் ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு மணிரத்னம், சூர்யா, அஜித், கார்த்தி, ஜோதிகா, அனிருத், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், ஹரி, சிவா என திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதிகாலையில் நடந்த சுபமுகூர்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையால் தாலி எடுத்துக் கொடுத்து, லேடி சூப்பர்ஸ்டார் கழுத்தில் விக்னேஷ் சிவன் கட்டிய அழகான தருணம் நிறைந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
இவர்களது திருமணம் நடந்து ஒரு சில நாட்கள் கடந்தாலும் அவர்களது திருமண பேச்சு இன்றும் லேடிஸ் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.
அத்துடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்திற்கும் நயன்தாராவின் நெருங்கிய தோழியான சமந்தா-நாகர்ஜுனா திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று இருக்கிறது.
அதாவது நயன்தாராவின் திருமணத்திற்கான புகைப்படங்களை ஜோசப் ராதிக் என்பவர்தான் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு சமந்தா-நாகர்ஜுனா திருமணத்தையும் இவர்தான் போட்டோகிராபராக பணிபுரிந்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல திரைப் பிரபலங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இவர்தான் போட்டோகிராபராக பணியாற்றுகிறார்.
இவர் இந்த இரண்டு திருமணத்திலும் எடுத்த புகைப்படங்கள் தத்ரூபமாகவும் கண்முன்னே அந்த நிகழ்ச்சி அப்படியே நடக்கிறது போன்றும் தெரியும் அளவுக்கு இவருடைய போட்டோஸ் ஒவ்வொன்றும் அவ்வளவு அற்புதமாக எடுத்திருக்கிறார்.
இதற்காகவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் மட்டுமல்ல நயன்தாராவின் ரசிகர்களும் போட்டோகிராபரை பாராட்டித் தள்ளுகின்றனர். மேலும் சமந்தா-நாகார்ஜுனா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து செய்திருக்கின்றனர்.
இப்படி பார்த்து பார்த்து போட்டோ ஷூட் எல்லாம் திருமணத்தில் நடத்திய தம்பதியர்கள், நிஜ வாழ்க்கையிலும் அழகாக வாழ்ந்து காட்டினால் நன்றாக இருந்திருக்கும்.
ஆகையால் நயன்தாரா, சமந்தா திருமணத்தில் போட்டோ ஷூட் எடுத்த போட்டோகிராபரை அப்படியே தன்னுடைய கல்யாணத்தில் பணியாற்ற வைத்தது எல்லாம் சரிதான். இதன் தொடர்ச்சியாக சமந்தா திருமண வாழ்க்கையில் செய்ததை, நயன்தாரா செய்யாமல் இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.