Malayagam
Home » அடிக்கடி காவல்துறையிடம் சிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

அடிக்கடி காவல்துறையிடம் சிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ராசி மற்றும் கிரகங்களை பொறுத்தது என கூறப்படுகிறது. நம்மில் சிலர் சிவனே என நமது வேலையை பார்த்துக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருப்போம்.

ஆனால், சமந்தமே இல்லாமல் காவல் துறையினர் நம்மை வழிமறைப்பார்கள். நம்மிடம் எல்லா ஆவணங்கல் இருந்து சில சமயங்களில் அபராதம் காட்டுவோம். என்னடா இது தொல்லையா இருக்கு என பல முறை நாம் நினைத்திருப்போம்.

இது போன்ற நிகழ்வு சிலருக்கு அடிக்கடி நிகழும். இப்படி அடிக்கடி நிகழ்ந்தால், நமது நண்பர்கள் கேலியாக கூறுவார்கள் உன் ராசி அப்படி என. ஆனால், அது கேலி அல்ல.. அது முழுக்க முழுக்க உண்மை. இது கிரகங்களின் தாக்கமாக கூட இருக்கலாம்.

ஜோதிடத்தின் படி, வண்டியை தாறுமாறாக ஓட்டி அடிக்கடி காவல்துறையினரிடம் ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் உங்களுக்கு கூறப்போகிறோம்.
​சிம்மம்

சூரியன் ஆளும் சிம்ம ராசிக்காரர்கள் என்னதான் புகழுக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும், வண்டி ஊட்டுவதில் மோசமானவர்கள் என ஜோதிடம் கூறுகிறது. சிங்கம் தனது இரையை வேட்டையாட எப்படி பொறுமையாக சிந்தித்து செயல்படுகிறோதோ அதே போல இவர்கள் வாகனம் ஊட்டுவதில் என்ன முயற்சிசெய் செய்தாலும் அது தோல்வியடையும்.

இவர்கள் இயல்பாகவே அதிகமாக சிந்திப்பவர்கள். இவர்கள் வண்டி ஊட்டும் போது தேவையில்லாத விஷயங்களை சிந்திப்பதால், வாகனம் இயக்குவதில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போய்விடுவதால் ஏதாவது தவறு நிகழ்கிறது. இதனால், இவர்கள் அடிக்கடி காவல்துறையினரிடம் மாட்டுவார்கள்.

​மீனம்

மீன ராசிக்காரர்கள் இயல்பாகவே அப்பாவியானவர்கள். இவர்களுக்கு அனைவரிடமும் அன்பு செலுத்த தெரிஞ்ச அளவுக்கு வாகனம் இயக்க தெரியாததால், இவர்கள் ஏதாவது விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். இவர்கள் அதிகமாக வாகனம் ஓட்டமாட்டார்கள். அப்படியே ஆசைப்பட்டு எடுக்கும் போது, காவல்துறையிடம் சிக்கிக்கொள்கின்றனர்.

DUI என்பது பொதுவான குற்றமாக இருந்தாலும், இவர்கள் அடிக்கடி இதற்காக அபராதம் செலுத்துவார்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், DUI-யின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த விஷயத்தில் மீன ராசிக்காரர்கள் அடிக்கடி காவல்துறையிடம் அடிக்கடி மாட்டிக்கொள்கிறார்கள்.

​கும்பம்

கும்ப ராசிக்காரர்கள், மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். இவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, குறுக்கு வழிகளை கண்டுபிடித்து பயணம் செய்வார்கள். இதன் மூலம் தனது நேரத்தை மிச்சபடுத்த நினைப்பார்கள். நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதால், இவர்கள் அதிகமாக போக்குவரத்து விதிகளை மீறுகிறார்கள்.

இதன் காரணமாக அடிக்கடி காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்வார்கள். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே, இந்த பிரச்னைக்கான பரிகாரம். அதேபோல் சாகச பயணம் செய்வதிலும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என கூறப்படுகிறது.

​கன்னி

கன்னி ராசிக்காரர்கள், மிகவும் கருணையுள்ள மற்றும் எல்லாவற்றிலும் சரியானவராக இருந்தாலும் வண்டி ஊட்டுவதில் கரடு முரடானவர்கள். பைக், சைக்கிள் ஓட்டுபவர்களுடன் இவர்கள் போட்டி போடுவது இல்லை. எனவே, தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், டிரைவர் இருக்கையில் இருக்கும் போது இவர்கள் சரியான நேரத்தில் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.

அதுமட்டும் அல்ல, காரில் ஸ்டேரிங்கை பிடித்தவுடன் அவர்கள் ஏதோ விமானத்தை இயக்குவது போல உணர்வதால், ஏதாவது ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால், போலீசிடம் மாட்டுவதுடன் அடிக்கடி அபராதம் செலுத்துகிறார்கள்.

ராசிக்காரர்கள்

​மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் டிரைவர் இருக்கையில் சுறுசுறுப்பாகவும், நம்பிக்கையாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தாராள மனசு உள்ளவர்கள். சாலையில் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து கொந்தளிப்பவர்கள். இடம், பொருள் பார்க்காமல் மற்றவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண சென்று விடுவார்கள்.

அதே போல, வழி தெரியாமல் தடுமாறி கொண்டிருப்பவர்களுக்கு வெளிக்காட்டியாக செயல்படும் நல்லவர்கள். இவர்கள் என்ன செய்தாலும் காவல்துறையினரிடம் காரணமின்றி சிக்குவார்கள். எதுக்கு அடி வாங்குறோம் என தெரியாமலேயே அடிவாங்குபவர்கள்.

​விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள், டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் சிந்திப்பார்கள். சவாலான சாலைகளிலும் கவனமாக வாகனத்தை இயக்குபவர்கள். அந்தவகையில் விருச்சிக ராசிக்கார்களை சிறந்த டிரைவர்கள்.

ஆனால், அவமானப்படுத்தப்பட்டதாக அவர்கள் உணர்ந்தால், அவர்கள் ஆக்ரோஷமாகி விடுவார்கள். எனவே, மற்ற வாகன ஓட்டிகளுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால், இவர்கள் போலீசிடம் அதிகமாக சிக்குவதுடன் அபராதமும் காட்டுவார்கள்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed