Homeஜோதிடம் | JOTHIDAMஇளம் வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய 4 ராசிகள்

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய 4 ராசிகள்

Published on

தற்போது பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்களுக்கு மணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும் உள்ளது. வாழ்க்கையில் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக்கூடிய 4 ராசியினரைக் குறித்துப் பார்ப்போம்.

வாழ்க்கையில் முக்கிய தருணம் என்றால் அது திருமணம் என சொல்லலாம். இளைஞனாக இருந்து, ஒரு இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது திருமண இன்பம் மட்டுமல்லாமல், அதைத் தாண்டி குடும்ப பொறுப்புகள், தன் பெற்றோர், தன் மனைவி இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும்.

அதே போல ஒரு பெண் திருமணம் செய்த பின் தன் புகுந்த வீட்டில் அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து நடந்து கொள்வதோடு, தன் குடும்ப மரியாதையை எந்த நேரத்திலும் குறைத்துவிடாமல் நடந்து கொள்ள வேண்டிய நிலை, கணவன், குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுதல் என பல்வேறு சவால்களைச் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும்.

இளம் வயதிலேயே திருமணம்

தற்போதுள்ள காலத்தில் திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி தேவைகளுக்காக இருவரும் வேலைக்கு செல்வதால் மேலும் சில சிக்கல்களைச் சமாளிக்க வேண்டிய சூழலும் உள்ளன.

சிலர் திருமணம் வேண்டாம், துணை வேண்டாம், தன் வாழ்க்கையை தனியாகவே கழிக்க நினைப்பவர்கள் உண்டு.

சிலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்க நினைப்பார்கள்.

தற்போது பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்களுக்கு மணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும் உள்ளது.

இந்த பதிவில் வாழ்க்கையில் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக்கூடிய 4 ராசியினரைக் குறித்துப் பார்ப்போம்.

​மிதுனம்

மிதுன ராசியினர் சமூகத்தில் பட்டாம்பூச்சி போன்று சுற்ற நினைப்பவர்கள். எப்போதும் யாருடனாவது சேர்ந்து துணையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

தன்னுடைய ராசி அடையாளமான இரட்டையர் அல்லது இணைந்த உருவத்தைப் போல தன்னுடன் ஏதேனும் ஒரு துணை இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதனால் அவர்கள் இளமையிலேயே திருமணம் குறித்த சிந்தனையுடனும் இருப்பார்கள்.

இவர்களைப் பொறுத்தவரையில் திருமணத்தால் ஒரு துணையும், ஆதரவான நபரும் கிடைப்பார்கள் என்பதால் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ள அதிக நாட்டம் கொண்ட நபர்களாக இருப்பார்கள்.

​கடகம்

அழகு, அன்பைத் தரக்கூடிய மனோகாரகன் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் எப்போதும் குழுவாக வாழ நினைப்பார்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

மிகவும் அன்பும், அக்கறையுமிக்க இவர்கள் தன் திருமண துணை மட்டுமல்லாமல், யாராக இருந்தாலும் அவருக்கு உதவியாக ஆதரவாக இருக்க நினைப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை நம்பியவரைத் தவிக்கவிட்டுச் செல்ல மாட்டார்கள்.

​துலாம்

துலாம் ராசியினர் எப்போதும் மற்றவர்களுக்கு மிகுந்த அன்பையும், அக்கறையையும் கொடுக்கக்கூடியவர்கள். இவர்கள் தனிமையை விரும்பாதவர்கள்.

அதனால் திருமணம் என்று வரும் போது தன் வாழ்க்கைத் துணையைப் போற்றக்கூடியவர்களாகவும், மிக ஆதரவாக இருப்பார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்பக்கூடியவர்கள். அதனால் இவர்கள் 20 வயதுக்கு முன்னரே தன் திருமணத்திற்குத் தயாராகி விடுவார்கள்.

​கன்னி

கன்னி ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் தாங்களாகவே கையாள நினைப்பார்கள். இவர்கள் சந்தோஷமோ, சோகமோ தனியாக சமாளிக்க நினைப்பார்கள். ஆனால் மறுபுறம் மனம் ஆறுதல் தேடிக் கொண்டேயும் இருக்கும்.

தனக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு நபர் வாழ்க்கையில் வந்தால் விரைவாக ஏற்றுக் கொள்வார்கள். மிக கடினமான உழைப்பாளிகளாக இருக்கும் இவர்கள் அன்பை வாரிவழங்குபவர்களாகவும், அன்பை தேடுபவர்களாகவும் இருப்பார்கள். இதனால் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.

 

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...