Malayagam
Home » இன்றைய ராசிபலன் – 13 மே 2022

இன்றைய ராசிபலன் – 13 மே 2022

இன்றைய ராசிபலன்

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனதில் இருந்து வந்த விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரிகள் பேசும் பேச்சில் இனிமையை கடைபிடிப்பது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எத்தகைய சவாலான வேலைகளும் சுலபமாக முடிக்க கூடிய வல்லமை பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் காண கூடிய அமோகமான நாளாக இருக்கிறது. மனதில் இனம் புரியா மகிழ்ச்சி அதிகரிக்கத் துவங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு உயரும் யோகம் உண்டு. விடாமுயற்சியை கையாளுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை தேவையற்ற இடங்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு என்பதால் தைரியமாக செயல்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாக கூடும் என்பதால் சமயோசித புத்தியுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இருந்து வந்த மனக்கசப்புகள் உங்களுடைய நன்னடத்தையும் மூலம் படிப்படியாக குறையத் துவங்கும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உசிதமானது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடன் உள்ளவர்கள் உங்களை எதிர்த்து செயல்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடும். இது நடக்கவில்லை என்று நினைத்தீர்களோ, அது நடக்கப் போகிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதக பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய யுக்திகளை கையாளுவதாக உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பழைய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தின் மீது கூடுதல் கவனம் தேவை. பெற்றோர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு கள் வலுவாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களில் அலைச்சல் ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை தேவை.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தையில் இனிமை தேவை. தேவையற்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். பெண்களுக்கு இறைவழிபாடு மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் இடையூறுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இழுபறியில் இருந்து வந்த வேலைகள் கூட சுலபமாக முடிவடையும் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் சுப பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு எதிராக முடிவடைய கூடும் என்பதால் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து பின் முடிவு எடுப்பது நல்லது. தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் நீங்கள் நினைத்த விஷயத்தை சாதித்துக் காட்டுவீர்கள். எத்தகைய சவால்களையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வு தேவை. உங்களுடைய வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமை பட கூடும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை அவசியம் ஆகும்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நாணயமாக நடந்து கொள்வது அவசியம் ஆகும். நேர்வழியை தவிர்த்து குறுக்கு வழியில் ஈடுபட நினைத்தால் தேவையற்ற வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்வீர்கள். சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் நன்மைகள் நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நடவடிக்கைகளில் புதிய மாற்றங்கள் தென்படும். தேவையற்ற மன சஞ்சலங்களை தவிர்த்து நேர்மறையாக சிந்திப்பது நல்லது. இறை வழிபாடுகளில் மீது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பனிப்போர் விலகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். மாணவர்களுடைய எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed