கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளையும் நாளை தொடக்கம் மூடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.