Mon, Mar1, 2021

இதையும் படிங்க

வாயில் இருந்து துர்நாற்றம் வீசுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

பொதுவாக வாழ்க்கையில் வாய் சுகாதாரம் ஒருவருக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒருவரது வாயில் இருந்து வீசும் துர்நாற்றம், அவர்களது அருகில் இருப்போரின் முகத்தை சுளிக்க வைப்பதுடன், அவர்களுடன் எப்போதும் ஒருவித இடைவெளியை பராமரிக்க வைக்கும். உங்கள்...

ஹிட்லர் பயன்படுத்திய டாய்லெட் இருக்கை.. ஏலத்தில் எத்தனை லட்சத்திற்கு விற்கப்பட்டது தெரியுமா..?

ஹிட்லர் ஏப்ரல் 20, 1889 இல் பிறந்தார், மேலும் சிலர் ஹிட்லரை ஒரு கொடூரமான மனிதராக அறிவார்கள். இதனுடன், அவரை ஒரு தேசியவாத தலைவராக கருதும் பலர் உள்ளனர். ஹிட்லரின் உத்தரவின் பேரில் மில்லியன்...

டாப்லெஸ் போஸால் தெறிக்க விடும் ஹன்ஷிகா

ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்ஷிகா மோத்வானி, 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து, எங்கேயும் காதல்,...

29 வயது பெண்ணுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய 52 வயது நபர்!

சென்னையில் 29 வயது பெண்ணுக்கு திருமணம் ஆசை காட்டி, 52 வயது நபர் ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் வசிக்கும் 29...

கம்பனியின் வாக்குறுதியை அடுத்து நுவரெலியா போராட்டம் கைவிடப்பட்டது

நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணங்கியதை அடுத்து, தாம் போராட்டத்தை கைவிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பார்க் தோட்ட முகாமையாளருக்கு எதிராக கட்சி பேதமின்றி, உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பார்க் பெருந்தோட்டப் பகுதியில் 305 வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை பெற்றுக்கொடுக்க தோட்ட முகாமையாளர் மறுப்பு தெரிவித்திருந்ததுடன், பெருந்தோட்ட மக்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் முகாமையாளர் நேற்றைய தினம் பேசியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டிருந்ததுடன், இன்று (18) பிற்பகல் போராட்டம் வெற்றியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

குறித்த முகாமையாளரின் உடமைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு ஒரு நாள் காலவகாசம் கோரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட கம்பனி உறுதியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, எட்டப்பட்ட தீர்மானம் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடிமைகளாக வாழ முடியாது என கூறியுள்ள ரமேஷ்வரன், பெருந்தோட்ட பகுதிகள் தமக்கு சொந்தமான காணிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2005ம் அண்டு தமது பெருந்தோட்ட பகுதிக்கு வருகைத் தந்த தோட்ட முகாமையாளர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வழமையான நடைமுறைகள் அனைத்தையும் மாற்றியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது நடவடிக்கை காரணமாக 300 வரையான தொழிலாளர்கள் பணிப் புரிந்த இந்த பகுதியில், தற்போது சுமார் 150 வரையான தொழிலாளர்களே பணிப் புரிந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களை அச்சுறுத்தியே அவர் தனது பணிகளை செய்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். கூட்டு உடன்படிக்கையிலுள்ள அனைத்து சலுகைகளையும் குறித்த முகாமையாளர் இல்லாது செய்துள்ளதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இவ்வாறான தோட்ட அதிகாரிகளை பணிக்கு அமர்த்த வேண்டாம் என பார்க் பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கந்தப்பனை பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த...

இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு

இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தலவாக்கலையில் குளவிக் கொட்டில் எட்டு பேர் பாதிப்பு

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில், இன்று (23) காலை 10.00 மணியளவில், குளவிக்கொட்டுக்கு இழக்காகிய எட்டு பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலைக் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைச் செடிகளிலிருந்து குளவிகள்...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்