Fri, May7, 2021

கிரீடத்தை மேடையில் வைத்து பறித்த திருமதி உலக அழகி – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு

திருமதி உலக அழகியான கரோலின் ஜூரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் திருமணமான அழகு ராணி தெரிவிற்கான இறுதிப் போட்டி நேற்று முன் தினம் மாலை நெளும் பொகுன அரங்கில் நடைபெற்றிருந்தது.

இதன்போது போட்டியாளரான திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஷிராந்தி ராஜபக்ஷ, ரோஸி சேனாநாயக்க மற்றும் சந்திமல் ஜெயசிங்க ஆகியோர் கிரீடத்தை சூட்டியுள்ளனர்.

இருப்பினும் ஒரு சில நிமிடங்களில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் எனவும், எனவே அவர் இந்த போட்டியின் வெற்றியாளராவதற்கு தகுதியற்றவர் எனவும் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மேடையில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ஏற்கனவே இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டவர் திருமணமான அழகு ராணியாக அறிவிக்கப்பட்டதுடன், புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடம் அகற்றப்பட்டு குறித்த பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமதி இலங்கை என்ற பட்டத்திற்கான பறிக்கப்பட்ட கிரீடத்தை மீண்டும் புஷ்பிகாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே திருமதி உலக அழகியின் செயலை வன்மையாக கண்டித்து திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டு குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போதைய திருமதி உலக அழகியான கரோலின் ஜூரியின் நடத்தை குறித்து ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்