Thu, Jan28, 2021
Home முக்கிய செய்தி கையில் அடிபட்ட சிறுமி சிகிச்சையில் திடீர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!

கையில் அடிபட்ட சிறுமி சிகிச்சையில் திடீர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி ராமகிருஷ்ணன்(30) – திவ்யபாரதி. இவர்களது இரண்டாவது மகள் பிரியதர்ஷினி(3).

இவருக்கு கடந்த 30ம் திகதி கையில் அடிபட்டுள்ளது. கழிவறைக்கு சென்ற போது பிரியதர்ஷினி கீழே விழுந்து அடிபட்டதால், கை வீக்கத்துடன் இருந்துள்ளது.

சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில், 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதன் படி, டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் பிரியதர்ஷினியை பெற்றோர் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் மாலை ஆபரேஷன் செய்த நிலையில், இரவு சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கையில் அடிப்பட்ட குழந்தை எப்படி இறக்கும் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து ராமகிருஷ்ணனின் உறவினர்கள் பலர் மருத்துவமனையில் குவிந்ததால், சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். தவறான சிகிச்சையால் தான் சிறுமி உயிரிழந்து விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

பின்னர் கோவை மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் முடிந்த பிறகு குழந்தையின் இதயம் வேலை செய்யவில்லை என்றும் நுரையீரல் சுருங்கி இருப்பதாகவும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்றும் சிறுமியின் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...