- Advertisement -
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில், இன்று (23) காலை 10.00 மணியளவில், குளவிக்கொட்டுக்கு இழக்காகிய எட்டு பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலைக் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைச் செடிகளிலிருந்து குளவிகள் இவர்களைக் கொட்டியுள்ளன.
குளவிக் கொட்டுக்குள்ளானவர்களில், ஆறு பெண் தொழிலாளர்களும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்ற நிலையில், இரு ஆண் தொழிலாளர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
ஏனைய ஆறு பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.