Fri, May7, 2021

பிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளி கமல் முன்னிலை! எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா?

தமிழகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கோயமுத்தூர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.

கடந்த 6-ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் எண்ணிக்கை, இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதன் படி முதலில் தபால் ஓட்டுகள் 7.30 மணிக்கு துவங்கியது.

ஒரு சில தொகுதிகளில் தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு தாமதமானது. இருப்பினும், தற்போது 9 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 64 இடங்களில் முன்னிலையும், அதிமுக கூட்டணி 40 இடங்களிலும், தினகரனின் அமமுக கூட்டணி 1 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்டுள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் பல இடங்களில் பின்னடைவை சந்தித்தாலும், கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

இவர் முதல் சுற்றின் முடிவில் 84 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்