நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து முன்னே சென்ற பவுசர் ரக வானகத்துடன் மோதி, இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டே குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(க.கிஷாந்தன்)
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.