பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், செல்வகந்தை தோட்டம், பொகவான தோட்டம், மோரா ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52,32,21,26 வயதுடையவர்களே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களை கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளான மேற்படி ஆறு பேரும் கொழும்பு புறக்கோட்டை, புளுமென்டல், பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து கடந்த 17ம் திகதி தமது வீடுகளுக்கு வருகை தந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை பகுதிக்கு வருகை தந்தவர்களிடம் கடந்த 24 ம் திகதி எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 46 பேரிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று (26) திகதி வெளியான நிலையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே குறித்த பகுதியிலுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களிடம் நெருக்கமான தொடர்பினை வைத்திருந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
க.கிஷாந்தன
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.