Homeமலையகம்நுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்

நுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இன்று (06) காலை முதல் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை பொலிஸ் பிரிவில், சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.