Sat, Mar6, 2021
Home சுற்றுலா கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!

கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் திருநெல்வேலி மாவட்டமும் மற்றும் அதன் கிழக்கில் ராமநாதபுரமும் விருதுநகரும் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னை தூத்துக்குடி நகரில் இருந்து 600 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கேரள தலைநகரம் திருவனந்தபுரம் தூத்துக்குடியிலிருந்து 190 கி. மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.

தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள் கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று.

இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை. தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. இது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்நகரம் பிரபலமான மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தை (CMFRI) தன்னகத்தே கொண்டுள்ளது . மற்ற சுற்றுலா இடங்கள் மானப்பாடு, கழுகுமலை, ஒட்டபிடாரம், எட்டயபுரம் கொற்கை ஆதிச்ச நல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்கி, நவ திருப்பதி போன்றவை.

மலையை குடைந்து கட்டப்பட்ட பிரபல ஜெயின் கோவில் அமைந்துள்ள கழுகு மலை, கொற்கை குளம் மற்றும் வெற்றி வேளம்மன் கோவில் முதலியன பிரபலமான சுற்றுலாத் தலங்கள்.

கடைசியாக சொல்லப்பட்ட இரண்டு இடங்களும் புகழ்பெற்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களாகும்.

புகழ்பெற்ற வரலாற்று இடமும் இங்கு இருக்கிறது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டபொம்மன் நினைவு கோட்டை இந்நகரத்தில் உள்ளது.

மாநிலத்தின் மற்ற எல்லா இடங்களில் இருந்தும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்நகரத்தில் விமான நிலையம் உள்ளது அது சென்னை விமான நிலையத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது. இந்நகரின் ரயில் நிலையம் தென் இந்தியாவின் பல நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் இருந்து தமிழ் நாட்டின் மற்ற மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன.

தூத்துக்குடி காலநிலை வெப்பமண்டல கால நிலையாகும். எனவே கோடை காலம் மிகவும் சூடாக இருக்கும். இதன் காரணமாக கோடை காலத்தில் இந் நகரத்தில் பயணம் செய்வது மிகவும் கடினம்.

பருவமழை காலத்தில் தூத்துகுடி அடிக்கடி மழை பெறும் இது சுற்றுலா நடவடிக்கைகளுக்கு சற்று இடையூராக இருக்கும். எனவே இந்நகரத்தை சுற்றி பார்க்க சிறந்த நேரம் குளிர்காலமான அக்டோபர் முதல் மார்ச் இடைப்பட்ட மாதங்கள் தான். அப்போது வெப்ப நிலை இதமாகவும் சற்று தணிந்தும் காணப்படும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...