பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார்.
அதில் தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது: அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார்.
எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம் தான் டியூஷனுக்குச் சென்றனர்.
இந்நிலையில் திடீரென்று, ஒரு வாரம், அவர்கள் டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர். அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன். அப்போது ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
வீட்டுக்குத் திரும்பி வந்து அது குறித்து அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம் புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை என்று நடிகை தேவோலீனா தெரிவித்தார்.
மேலும் இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள் என நடிகை தேவோலீனா தெரிவித்துள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.