in , ,

சீரியல்ல நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஜோடி!

நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணம் சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த ரீல் ஜோடிகள் காதலித்து வந்த நிலையில், இன்று முதல் ரியல் ஜோடிகளாக மாறி உள்ளனர். ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சித்துவுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர்.

சின்னத்திரை நடிகர்களான சித்து சித் மற்றும் ஸ்ரேயா ஆஞ்சன் திருமணம் இன்று சென்னையில் உள்ள தனியார் மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 முதல் 2020 வரை 500 எபிசோடுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய திருமணம் சீரியலின் ரீல் ஜோடிகள் தான் இன்று ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டு மணமக்களாக மாறி உள்ளனர்.

சித்து சந்தோஷ் எனும் கதாபாத்திரத்திலும் ஸ்ரேயா ஜனனி எனும் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

திருமணம் சீரியலில் ஜோடிகளாக நடித்த இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், தற்போது தங்களின் நீண்ட நாள் கனவான திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளனர்.


பிங்க் நிற சேலையில் மணப்பெண் ஸ்ரேயாவும் பட்டுவேட்டி சட்டையில் மணமகன் சித்துவும் மணமேடையை அலங்கரித்தனர்.

சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த சித்து மற்றும் ஸ்ரேயாவின் திருமணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில் இருவரது திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தாலி கட்டும் புகைப்படம் உள்ளிட்ட ஏகப்பட்ட திருமண சடங்கு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நட்சத்திர ஜோடியினரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சித்து தற்போது நடித்து வருகிறார். அன்புடன் குஷி சீரியலில் ஸ்ரேயா கடைசியாக நடித்து இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய இசைவாணி..

பிக்பாஸ்

இந்த வார தலைவர் போட்டி: பிரியங்கா கேள்விக்கு தாமரை பதிலடி