ட்விட்டர் CEOக்கு அடித்த யோகம்!
உலகத்தின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில் அதன் CEO பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் அவருக்கு கோடிக்கணக்கான தொகையை ட்விட்டர் நிறுவனம் கொடுக்க வேண்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார்.
பின்னர் போலி கணக்குகள் குறித்த விபரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி அந்த டீலை நிரந்தரமாக கைவிட்டார் மஸ்க். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது.
செவ்வாய் வக்ர பெயர்ச்சி: மோசமான பலன்களை பெறப்போகும் 5 ராசிக்காரர்!
இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
ட்விட்டர் CEOக்கு அடித்த யோகம்!
அத்துடன், ட்விட்டர் நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோரையும் மஸ்க் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ட்விட்டர் CEO பணிநீக்கம் செய்யப்பட்டாலும் அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டில் ஊழியராக இணைந்தார் பராக் அகர்வால். அப்போது ட்விட்டரில் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 1000 மட்டுமே.
எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக டுவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார். இந்நிலையில், திடீரென டுவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் திகதி அறிவித்தார்.
எலான் மஸ்க் வசமானது டுவிட்டர்; உயரதிகாரிகள் திடீர் பணிநீக்கம்