HomeசினிமாCeleb Newsஇதுலயும் நான்தான் பர்ஸ்ட்... உற்சாகத்தில் திரிஷா

இதுலயும் நான்தான் பர்ஸ்ட்… உற்சாகத்தில் திரிஷா

கடந்த 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனை தொடர்ந்து . சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

ரஜினிக்காந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா.

- Advertisement -

கடைசியாக திரிஷா நடிப்பில் ஓடிடியில் வெளியான பரமபத விளையாட்டு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகை த்ரிஷாவுக்கு மதிப்புமிக்க கோல்டன் விசா வழங்கியுள்ளதுது. தமிழ் சினிமாவில் இந்த பெருமையை பெறும் முதல் பிரபலம் என்ற சிறப்பை பெற்றுள்ளார் திரிஷா.

- Advertisement -

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடுக்கும் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் பாக்கியமும் எனக்கு கிடைத்துள்ளது… நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட் வழங்கும் கோல்டன் விசா பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு சோதனை எளிமையாக இருக்கும்.

இந்த விசா யு.ஏ.இக்கு பல முறை செல்லலாம், இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்களின் குழந்தைகள், குடும்பத்திற்கும் விசா பயன் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர்கள் ஷாருக்கான், மம்முட்டி, மோகன் லால், டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் போனி கபூர் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட் வழங்கும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular