ஆணோ, பெண்ணோ ரூம் மேட் உடன் முறையான புரிதல் இல்லாவிட்டால் தினந்தோறும் சச்சரவுகளுக்கு பஞ்சமே இல்லாதது போலதான் இருக்கும்.
இப்படியாக ஃப்ளாட் மேட் வேண்டி பல விளம்பரங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக காணக்கிடைக்கின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த ஓவன் என்பவரின் ரூம்மேட் வான்டெட் விளம்பர போஸ்டர் நெட்டிசன்களிடையே கடுமையான கண்டனங்களை பெற்றிருக்கிறது.
அதில், “சிங்கிள் ஆண். வயது 44. ரூம் மேட் தேடி வருகிறேன். 18-25 வயதுக்குள் சிங்கிளாக இருக்கும் பெண்ணாக இருக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தி, சமைக்க வேண்டும். ஒரு படுக்கை அறை கொண்ட வீடு என்பதால் வேண்டுமென்றால் பெட்ரூமை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Also Read : விக்ரம் கன்னத்தை தொட்ட ஐஸ்வர்யா ராய்: வைரல வீடியோ
செல்லப்பிராணிகள், மது, போதை, ஆண் நண்பர்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது. பாதுகாப்புக்காக no closed door பாலிசியும் உள்ளது. மாதம் 400 டாலர் வாடகை (₹32,633)” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்ட ட்விட்டர் பயனர் ஒருவர், “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அவருக்கு மாதம் $400 கொடுக்க வேண்டுமா? என்ன ஒரு மோசமான விளம்பரம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விளம்பர பதிவு நெட்டிசன்களிடையே வைரலாகி பலரும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.
Also Read : விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் வாரிசு: யார் மகள்னு தெரியுமா?