Mon, Dec5, 2022

#Trending

வானத்தை போல திரைப்படத்தில விஜயகாந்திற்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்த நடிகை?

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானத்தை போல.

விஜயகாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் அவருடன் பிரபு தேவா, மீனா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தனது தம்பிகளுக்காக அண்ணன் செய்யும் தியாகங்கள் குறித்து சொல்லப்பட்ட இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மெகா ஹிட்டானது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வசூலை குவித்தது.

வானத்தை போல

அப்படியான இப்படத்தில் நடிகை மீனா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானதே நடிகை ரோஜா தான். ஆனால் அதற்கு முந்தைய விக்ரமன் திரைப்படத்திலும் நடிகை ரோஜா கதாநாயகியாக நடித்தார்.

இதனால் இப்படத்திலும் அதே சாயல் வந்துவிடும் என்பதால் நடிகை ரோஜாவிற்கு நோ சொல்லிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். இதனை விக்ரமன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities