HomeசினிமாBiggBossநான் டிரெஸ் மாத்தும் போது உன்னை உள்ளேயே விட மாட்டான்.. வேற லெவல் சண்டை!

நான் டிரெஸ் மாத்தும் போது உன்னை உள்ளேயே விட மாட்டான்.. வேற லெவல் சண்டை!

கமல்ஹாசன் டிரெஸ் மேட்டர் பஞ்சாயத்தை பேசி முடித்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் பாவனி, சுருதி மற்றும் வருண் இடையே ஒரு பிரளயமே நடந்தது. இதுவரை எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருந்த வருண் பாவனியிடம் சும்மா எகிறி சண்டை போட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாவனி அபிநய் உன்னை பத்தி தப்பா சொல்றாருன்னு சொன்னப்போ வருணுக்கும் அபிநய்க்கும் சண்டை வரும் என எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்களுக்கு இந்த சண்டை செம ஷாக்கிங் ட்விஸ்ட் தான்.

- Advertisement -

பாத்ரூம் மற்றும் உடை மாற்றும் அறையில் மட்டும் பிக் பாஸ் வீட்டில் கேமரா இல்லாமல் இருப்பது தனி நபருக்கான பிரைவசிக்கான விஷயமாக பார்க்கப்படுகிறது. நம்பிக்கையுடன் ஒருவர் மற்ற போட்டியாளரை அனுமதிக்கும் போது அங்கே அவரது நம்பிக்கையை உடைத்து திருடியது தான் இந்த வாரத்திற்கான பெரிய பிரச்சனையாகவே மாறியது.

கமல்ஹாசன் அந்த பிரச்சனை குறித்து இரு தரப்பையும் பேச வைத்து பஞ்சாயத்தை முடிக்க முயன்ற போது சுருதி மன்னிப்பு கேட்டார். ஆனால், தாமரை அந்த மன்னிப்பை ஏற்க மறுக்கவில்லை. பாவனி மற்றும் சுருதிக்கு கமல் சார் ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டார் என்கிற எண்ணம் அந்த காட்சி முடிந்ததும் இருந்தது தான் இந்த சண்டைக்கே காரணம்.

- Advertisement -

வாய்க்கு வந்தபடி பிக் பாஸ் வீட்டுக்குள் தாமரை செல்வி பேசி வருவது பலரையும் காயப்படுத்தி வருகிறது. விளையாட்டுக்காக காயினை திருடிய சுருதி மற்றும் பாவனி செய்தது நம்பிக்கை துரோகம், வளர்ப்பு சரியில்லை மற்றும் எடிட் செய்யப்பட்ட வார்த்தைகளால் தாமரை செல்வி பேசிய வார்த்தைகள் குறித்து கமல் ஏன் கேள்வியே எழுப்பவில்லை என்கிற வருத்தம் சுருதிக்கு இருந்தது.

அது தொடர்பாக நிரூப்பிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த வருணுக்கும் பாவனிக்கும் சண்டை ஏற்பட்டு பெரிய ரணகளமாக பிக் பாஸ் வீடு மாறியது.

நிரூப்பிடம் அமைதியாக எடுத்து பேசிக் கொண்டிருந்த பாவனி மற்றும் சுருதி அதே விவகாரத்தை பற்றி வருண் பேச வந்த போது அவரது வாயை அடைப்பது போல பாவனி அடுத்தடுத்து பேசி ஆமாம்.. அப்படி தான் என்ன பண்ண சொல்ற.. என்பது போல பேச சூடான வருண் பாவனியுடன் சண்டை போட ஆரம்பித்தார்.

ஒருத்தர் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது உள்ளே வரலாமா? என கேட்டுக் கொண்டு செல்வது தான் மேனர்ஸ் என வருண் பேச ஆரம்பிக்க நீங்க உள்ளே இருக்கும் போது நான் கேட்டுட்டுத் தான் வருவேன் என பாவனி பேச தெரியாமல் பேச பதறி போன வருண் உன்னைலாம் உள்ளே விட மாட்டேன்.

நான், அபிநய், அண்ணாச்சியையே உள்ளே விட மாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டார். மேலும், ஒருமையிலும் வருண் திட்ட தொடங்கிய நிலையில், விட்டா ராஜு மூஞ்சி மேலயே குத்து விட தோணுதுனு சொன்னது போல செய்து விடுவாரோ என ரசிகர்கள் பயந்தே போய்விட்டனர்.

நீங்க இந்த பிரச்சனைக்குள்ள வராதீங்க இது எங்க விஷயம் என பாவனி மற்றும் சுருதி வருணை ஆஃப் செய்ய நினைக்க அப்படியே இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போயிடட்டா.. என ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டார். பாவனி கையிலும் ஒரு காயின் இருக்கு.. வருண் கையிலும் ஒரு காயின் இருக்கு வரும் வாரங்களில் இந்த சண்டை எந்த அளவுக்கு செல்லப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

 

கமல் போன வாரம் சிக்னல் கொடுத்து எச்சரித்ததும் உஷாரான பிரியங்கா தொடர்ந்து அமைதி தூதுவராக பிக் பாஸ் வீட்டில் மாறியுள்ளார். இந்த பிரச்சனையிலும் உள்ளே புகுந்து நான் ஒன்று சொல்லட்டா.. இனிமே இந்த பிரச்சனையை பப்ளிக்கா நீங்க ரெண்டு பேரும் பேசுறத நிறுத்துங்க.. அடுத்த வாரம் அடுத்த ஸ்க்ரிப்ட் கொடுப்பாங்க என்பது போல பேசி சமாதானம் செய்து விட்டார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular