இந்தி திரையுலகில் தூம் 2, ராயீஸ், ரோட் டூ சங்கம், தபாங் 3, ஓ மை காட், ஐ எம் சிங் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் யூசுப் உசைன். 73 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
யூசுப் உசைன் உயிரிழந்ததை அவரது மருமகனும், இயக்குனருமான ஹன்சல் மேதா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், நிதி பிரச்சனையால் ஷாஹிட் படம் வெளியிடுவதில் சிக்கல் இருந்தது.
மிகவும் கஷ்டப்பட்டேன். கிட்டத்தட்ட என் திரை வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தேன். அப்போது, அவர் (யூசுப்) என்னை அழைத்து பிக்சட் டெப்பாசிட்டில் பணம் வைத்திருக்கிறேன்.
நீ இவ்வளவு சிரமப்படும்போது அந்த பணம் இருந்து எந்தப் பயனும் இல்லை என்று கூறி காசோலை வழங்கினார். அப்படி தான் ஷாஹிட் படம் வெளியானது. அவர் எனக்கு மாமனார் மட்டும் இல்லை நல்ல தந்தை.
இன்று அவர் மறைந்துவிட்டார். நான் அனாதையாக இருப்பது போன்று உணர்கிறேன். வாழ்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் உங்களை மிகவும் மிஸ் பண்றேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும், யூசுப் உசைனின் மறைவுக்கு அபிஷேக் பச்சன், நடிகர் மனோஜ் பாஜ்பயி, நடிகையும் இயக்குனருமான பூஜா பட் உள்ளிட்டோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது யூசுப் உசைனின் மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.