தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நூறாவது நாள் சூட்டிங் நடைபெற்ற நிலையில் ஒரு புகைப்படம் வெளியானது.
படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கின்றனர். அதில் ஒருவர்தான் இயக்குனர் செல்வராகவன்.
அதேபோல் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் இரண்டாவது நாயகியாக அபர்ணா தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை தொடர்ந்து இவர் அட்லி இயக்கத்தில் மீண்டும் ஒரு மறை கூட்டணி அமைத்து நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2023 இல் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் மீண்டும் அட்லி இயக்கத்தில் இணைவது சாத்தியமில்லாத ஒன்று. தற்போது இதற்கு வாய்ப்பில்லை எனவும் இன்னொரு பக்கம் சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.