பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 53 வது நாளான நேற்று, அபிஷேக், அமீரைத் தொடர்ந்து அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரையின் டாப் நடிகர்களில் ஒருவருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
ஹவுஸ்மேட்கள் டாஸ்கில் இருக்கும் சமயத்தில், ரியாக்ட் பண்ணலாமா வேண்டாமா என குழம்ப வைத்து, மாஸான பாடலுடன், ஸ்டைலான நடையுடன் த்ரில்லிங் என்ட்ரி கொடுத்தார் சஞ்சீவ். நீண்ட யோசனைக்கு பிறகே ஹவுஸ்மேட்கள் அவரை வரவேற்று, தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
வீட்டிற்கு வந்த உடனேயே சஞ்சீவிடம், வெளியில் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அனைவரும் அவரை சுற்றிக் கொண்டு ஆர்வமாக கேட்டனர்.
அவரும் வழக்கம் போல் அனைவரும் சொல்வதை போலவே, மற்ற சீசன்களை போலவே இந்த சீசனும் நன்றாக உள்ளது. நல்ல வரவேற்பு இருக்கு என சொல்லிக் கொண்டே, ஏன் இவர் வெளியில் போயிட்டு தான வந்திருக்கார். இவர் எதுவும் சொல்லவில்லையா என அபிஷேக்கை கோர்த்து விடுகிறார் சஞ்சீவ்.
அபிஷேக், அமீர் இருவரும் கொஞ்சம், கொஞ்சம் இன்டிமேஷன் கொடுத்தார்கள். இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கள் என சஞ்சீவை துருவி துருவி கேட்கிறார் பிரியங்கா. அவர்களை சமாளித்து வீட்டிற்குள் செல்ல முயற்சிக்கும் சஞ்சீவிடம், ஒரே ஒரு கேள்வி என கேட்டு நிறுத்துகிறார் சிபி.
அனைவரும் ஆர்வமாக பார்க்க, விஜய் சார் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறாரா என கேட்கிறார்கள் சிபி. மற்றவர்களும் ஆர்வமாக, ஆமாம் அதை சொல்லுங்க முதலில்.
அவர் பார்க்கிறாரா என கேட்கிறார்கள். அப்போது சஞ்சீவை க்ளோஸ் ஷாட்டில் காட்ட, இந்த பதில் சொல்லலாமா, வேண்டாமா என தயக்கத்துடனேயே லைட்டான புன்னகையுடன், லைட்டாக தலையை அசைக்கிறார் சஞ்சீவ்.
அதை பார்த்து விட்டு சந்தோஷத்தில், அது போதும். சிபியை தெரியும் அவருக்கு என்கிறார் சிபி. மற்றவர்களும் அப்படியானால் விஜய் சாரும் பிக்பாஸ் பார்க்கிறாரா என சந்தோஷப்படுகிறார்கள்.
சஞ்சீவின் இந்த லேசான தலை அசைவு, ஹவுஸ்மெட்களை மட்டுமல்ல, விஜய் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. பிக்பாஸ் பார்க்கும் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
வழக்கம் போல் இதை வைத்தும் விஜய்யை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள். விஜய்யின் நண்பர் என்ற எதிர்பார்ப்பு சஞ்சீவ் மீது இருந்தாலும், விஜய்யின் பெயரை பயன்படுத்தாமல் தனது சொந்த திறமையை காட்டி விளையாடி, கேமில் வெற்றி பெற வேண்டும் என்பது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, ஏராளமானவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.