Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கமல் நடித்த விக்ரம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதா ?

vikram-shooting-schedule-in-coimbatore-stopped

உலக நாயகன் கமலஹாசன், தற்போது சினிமா, அரசியல், டிவி ஷோ என ஒரே நேரத்தில் பலவற்றிலும் கவனம் செலுத்தி பிஸியாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில் கொரோனாவிற்கு முன்பே அறிவிக்கப்பட்ட கமல் ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தையும் சமீபத்தில் துவக்கி உள்ளார்.

சிகாகோவில் இந்த நிறுவனத்தின் துவக்க விழாவை நடத்தி, ரேம்ப் வாக்கும் நடத்தினார். எந்த காலத்திலும் அணிய ஏற்ற வகையில் இருப்பதால் இது அமெரிக்க வாழ் தமிழர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. கமலின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதற்கிடையில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வந்த விக்ரம் படத்தின் ஷுட்டிங் நவம்பர் 17 ம் தேதி முதல் கோவையில் நடந்து வருகிறது.

தற்போது கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், விக்ரம் பட செட்டில் கமலுடன் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சிலர் சந்தேகம் கிளப்பினர்.

இதனால் விக்ரம் படத்தின் ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. பெரும்பாலான காட்சிகளில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்க போவதாக கூறப்பட்டதால், கமல் இல்லாமல் ஷுட்டிங்கை நடத்த முடியாது என பாதியில் நிறுத்தி விட்டதாகவும் கூறப்பட்டது.

இது பற்றி விசாரித்ததில், விக்ரம் படத்தின் ஷுட்டிங் நிறுத்தப்படவில்லையாம். கமல் தவிர மற்ற நடிகர், நடிகைகள் நடிக்கும் சீன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறதாம்.

அதுமட்டுமின்றி கோவையில் விக்ரம் ஷுட்டிங் துவங்கியது முதலே கமல் இதுவரை கோவை செல்லவில்லையாம்.

சிகாகோ பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் பிக்பாஸ் 5 ஷுட்டிங் இருந்ததால், அதை முடித்த பிறகு கோவை ஷுட்டிங்கை துவக்க கமல் திட்டமிட்டிருந்தாராம்.

அதற்குள் கமலுக்கு கொரோனா ஏற்பட்டதால் திட்டமிட்டபடி ஷுட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

இன்னும் 10 நாட்களாவது கமல் தனிமையில், ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் மட்டுமே இப்போது எடுக்கப்பட உள்ளதாம்.

டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஷுட்டிங்கில் கமல் கலந்து கொள்வார் அல்லது படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் ஏற்கனவே திட்டமிட்டபடி முடித்து விட்டு, கடைசியாக விட்டுப் போன காட்சிகளை எடுக்கும் போது, கமலை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

கமல் இதுவரை கோவையில் நடக்கும் ஷுட்டிங்கில் கலந்து கொள்ளாததால் அங்கிருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறப்படுகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.