Save 20% off! Join our newsletter and get 20% off right away!

Vikram Twitter Review: முதல் பாதி எப்படி இருக்கு?

விக்ரம் படம் பார்க்க போறீங்களா... இதை பண்ணுங்க...லோகேஷின் அட்வைஸ்

Vikram Twitter Review : கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என மூவரும் முதல் பாதியில் மிரட்டி உள்ளனர் என்றும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மேஜிக் படம் முழுக்க நிறைந்து காணப்படுகிறது என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அனிருத் தான் ஹீரோவே என்றும் பிஜிஎம் ஒவ்வொரு இடத்திலும் மண்டைக்குள் புகுந்து விளையாடுகிறது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் விமர்சனங்களை பார்ப்பலாம்.

ரமேஷ் பாலா விமர்சனம்

சினிமா டிராக்கரான ரமேஷ் பாலா விக்ரம் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டு வெறித்தனம் என பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மேஜிக், கமல்ஹாசன் ஆன் ஃபயர், பகத் ஃபாசில் ஷோ ஆல் தி வே, விஜய்சேதுபதி பெருசா மிரட்டி உள்ளார் என்றும் சிறந்த இன்டர்வெல் விக்ரம் படத்தில் இருக்கு என்றும் போட்டு கமல் ரசிகர்களை தியேட்டருக்கு கிளம்பி வாங்க என அலாரம் அடித்துள்ளார்.

 Vikram Twitter Review: முதல் பாதி எப்படி இருக்கு?

பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்

தமிழ் சினிமாவை சர்வதேச சினிமாவாக விக்ரம் படத்தின் இன்டர்வெல் காட்சி மாற்றி உள்ளது. நடிகர் கமலுக்கான உண்மையான ட்ரிப்யூட் படமாக விக்ரம் அமைந்துள்ளது என பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பகத் ஃபாசில் ரூலிங்

சத்தமே இல்லாமல் சைலன்ட்டாக இருந்த அந்த மிளகாய் பஜ்ஜி பகத் ஃபாசில் தான் முதல் பாதி படத்தையே தனது தீவிரமான விசாரணையால் விறுவிறுப்பாக மாற்றி உள்ளார் என்றும் முதல் பாதியில் பகத் ஃபாசில் மற்றும் விஜய்சேதுபதி தான் ஆளுமை செலுத்தி உள்ளனர். இரண்டாம் பாதியில் தான் கமலின் ஆட்டம் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் சித்தார்த் ஸ்ரீனிவாஸ்.

100 சதவீதம் லோகேஷ் படம்

மாஸ்டர் திரைப்படம் 50 சதவீதம் லோகேஷ் படம் 50 சதவீதம் விஜய் படமாக இருந்த நிலையில், விக்ரம் படம் முழுக்க முழுக்க 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படம் தான் என படம் பார்த்த நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். கன்ஃபார்ம் பிளாக்பஸ்டர் படமாக விக்ரம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vikram movie, vikram review, kamalhaasan, vijay sethupathi ,fahadh faasil ,lokesh kanagaraj, விக்ரம் திரைப்படம், விக்ரம் விமர்சனம் ,கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ,லோகேஷ் கனகராஜ்

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.