இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்ன இரண்டு நாட்கள் பெட்ரோலுக்கு காத்திருந்ததாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. குறிப்பாக எரிபொருள் தேவை மிக அதிகமாக உள்ளது.
மக்களில் 10 சதவிதம் பேருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைப்பதாகவும், அதற்கும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணரத்னே பெட்ரோலுக்காக இரண்டு நாட்கள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ‘கிளப் கிரிக்கெட் சீசன் இருப்பதால், நாங்கள் கொழும்பில் பயிற்சிக்காக வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் நான் கடந்த இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்றேன். 10,000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினேன். அது 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.