இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மகள் குறித்து பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது.
இந்த முறை கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட இந்தியா, தொடர்ச்சியாக பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
இதில் முக்கியமான தோல்வியாக பாகிஸ்தான் போட்டிதான் பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் தோல்வியே பெறவில்லை என்ற சாதனை இந்தாண்டு தகர்ந்தது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக மோசமாக தோல்வி பெற்றது.
இதனால் ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக வீரர்களை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை மத ரீதியாக விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விராட் கோலி கண்டனம் தெரிவிக்க முடிவுற்றது. இந்நிலையில் விராட் கோலிக்கே தற்போது அநீதி நடந்துள்ளது.
விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு வாமிகா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. இதுவரை குழந்தையின் முகத்தை கூட வெளியுலகிற்கு காட்டாமல் இருந்து வருகிறார் கோலி.
ஆனால் அந்த குழந்தை குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளில் விமர்சித்துள்ளனர் சில வஞ்சகமான ரசிகர்கள். இதில் இன்னும் சில பேர் பாலியல் ரீதியாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் கொதித்து எழுந்த டெல்லி மகளிர் ஆணையம், டெல்லி போலீஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கோலியின் குழந்தை மீது பாலியல் மிரட்டல் வந்தது வெட்கக்கேடானது.
அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை, முதல் தகவல் அறிக்கை, கைது செய்யப்பட்டவர்கள் விவரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. விரைவில் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.