Wed, Sep28, 2022
HomeசினிமாTelevisionகணவர் வீட்டில் அனுபவித்த கொடுமை: நடிகை பகீர் பேட்டி.!

கணவர் வீட்டில் அனுபவித்த கொடுமை: நடிகை பகீர் பேட்டி.!

HTML tutorial

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமரான போட்டோ ஷுட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

மகேஸ்வரி சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீ தமிழ் மூலம் ரீஎன்ட்ரி ஆன மகேஸ்வரி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருமணமான பின் தனது முன்னாள் கணவன் வீட்டில் தான் அனுபவித்த இன்னல்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் மகேஸ்வரி. அதில், தன்னுடைய கணவர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்கள் தன்னை அடிமைப்படுத்தியதாகவும் ஆண் நண்பர்களுடன் பழக கூடாது என்றும் சீரியல்களில் நடிக்க கூடாது என்றும் நிபந்தனை விதித்ததாகவும் அதனால் தொகுப்பாளினியாக மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சீரியல்களில் நடித்தால் தங்கள் குடும்ப மானம் போய்விடும் என்று கூறி தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அது மட்டுமின்றி தனது அம்மாவுக்கு செய்த சிறு சிறு உதவிகளை கூட செய்யக் கூடாது என்று தடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அம்மாவுக்கு உதவி கிடைக்காததால் எனது அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவு எடுத்ததாகவும், கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவை எப்படி நான் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து விடுவித்து கொள்ள விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் விவாகரத்துக்கு பின்னர் தற்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இவர் அண்மையில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார். மகேஸ்வரிக்கு கேசவ் என்ற ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க