பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான ரம்யா, விவாகரத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அதன்படி, மணிரத்னத்தின் ‘ஓ கண்மணி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர், அமலா பாலின் ‘ஆடை’, ‘கேம் ஓவர்’ போன்ற படங்களிலும் நடித்தார்.
தற்போது விஜயின் ‘மாஸ்டர்’ மற்று வெற்றிமாறன் தயாரிக்கும் ‘சங்கத்தலைவன்’ படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவ்வபோது தனது புதிய புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ரம்யா, சில சமயங்களில் கவர்ச்சியான உடைகள் அணிந்திருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.
இந்த நிலையில், ரம்யா படு கவர்ச்சியான பிகினி உடை அணிந்துக் கொண்டிரு போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் திடீரென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்கள், ‘ஆடை’ படத்திற்காக எடுக்கப்பட்டவை என்று கூறப்பட்டாலும், ‘ஆடை’ படம் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழுவினர், அப்போது இந்த புகைப்படங்களை வெளியிடவில்லை.
ஆனால், ஆடை படத்தின் தெலுங்கு வெர்ஷன் ரிலீஸ் போது, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ரம்யாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை படக்குழு வெளியிட்டதாக கூறப்படுகிறது.
ஆடை தெலுங்கு வெர்ஷன் மூலம் தெலுங்கு சினிமாவில் வைரலான ரம்யாவின் ஹாட் பிகினி புகைப்படங்கள் தற்போது கோலிவுட்டிலும் வைரலாக தொடங்கியுள்ளது.