Malayagam
Home » பருக்களை அடியோடு அழிக்க எளிய வழிகள் இதோ!

பருக்களை அடியோடு அழிக்க எளிய வழிகள் இதோ!

முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம். அந்தவகையில் பருக்களை எளியமுறையில் விரட்ட சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.

  • வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலிமஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவவும்.
  • அவரை இலை சாறு தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் குணமாகும்.
  • அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்துவர முகப்பருக்கள் ஒழியும்.
  • அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தடவி வர மறையும்.
  • வெள்ளைப்பூண்டும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி பரு மீது தடவ நீங்கும்.
  • கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவிவர இரண்டு நாட்களில் பருக்கள் மறையும்.
  • சந்தனம் முகத்தில அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ குணமாகும்.
  • சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்துப் பற்றுப் போடலாம்.
  • சந்தனக்கட்டையை எலும்பிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவலாம்.
  • மரப்பாச்சிலை நீர்விட்டு கல்லில் மைய அரைத்து பரு மீது தடவிவர பருக்கள் மறையும்.
  • ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவ குணமாகும்.
  • கானாவாழை இலையை கசக்கி பூச விரைவில் நீங்கும்.
  • மஞ்சத்தூள், சோற்றுக்கற்றாழை சேர்த்து அரைத்து பூச பரு மறையும்.
  • துத்தி இலையை அரைத்து காடியில் கரைத்து முகப்பருக்கள் மீது தடவிவர பருக்கள் மறையும்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed