எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த ‘RRR’ திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகும்.
இந்த ஆக்ஷன் திரைப்படம் மார்ச் மாதம் வெளியானதிலிருந்து பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து படம் வெளியான இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட விமர்சர்கள் இந்த படத்தின் இரண்டு ஆண் கதாநாயகர்களுக்கு இடையேயான “கெமிஸ்ட்ரி” ஒரு ஓரின சேர்க்கை காதலை வெளிப்படுத்துவதாக இணையத்தில் பேசப்படுகிறது.
அந்த வகையில், பல பார்வையாளர்கள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மக்கள், ‘RRR’ படத்தை ஒரு ஓரினச்சேர்க்கையாளர்களின் காதல் மற்றும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை பற்றி ட்வீட் செய்துள்ளனர்.
இப்பொது, இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனை அறிந்த பால பாலிவுட் சினிமா ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேரதிர்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments