in

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த சொகுசு கார்… தந்தை, மகள் பலியான சோகம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வந்த வீரன்(40) தனது மனைவி உமா மற்றும் மகள் சுஷ்மிதா(13) ஆகியோருடன் தனது சொந்த ஊரான மேட்டூருக்கு சென்றுவிட்டு மீண்டும் பெங்களூரு நோக்கி பொலிரோ காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

இன்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியில் உள்ள தாபா ஒன்றில் உணவு அருந்த காரை நிறுத்தியுள்ளனர்.

கார் நின்ற பிறகு உமா காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர், பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கண் இமைக்கும் நேரத்தில் வீரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக சென்று சாலையோரத்தில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் கவிந்தது.

இதில் பொறியாளர் வீரன் மற்றும் அவரது மகள் சுஷ்மிதா ஆகியோர் கிணற்றில் மூழ்கினர். உமாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து குறித்து தருமபுரி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் வீரன் மற்றும் குழந்தை சுஷ்மிதாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிணற்றில் 45 அடிக்கும் மேல் நீர் உள்ளதால் காரில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆறு மணிநேர போராட்டத்திற்கு பிறகு வீரன் மற்றும் சுஷ்மிதாவின் உடல்கள் மீட்கப்பட்டன.

கார் கிணற்றில் கவிழ்ந்த சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கண் கூசும் கவர்ச்சி உடையில் பார்ட்டிக்கு வந்த இளம் நடிகை

நமீதா மாரிமுத்துவை தொடர்ந்து மற்றுமொரு பிக் பாஸ் பிரபலததை நேரில் சந்தித்த சுருதி!