விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிந்து, தற்போது ஐந்தாவது சீசன் துவங்கி, நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை, சச்சரவுகள், மோதல்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.
ஆனால் பிக்பாஸ் சீசன் 5 துவங்கி முதல் வாரம் பெரிய அளவில் சண்டை ஏதும் இல்லாமல் கலகலப்பாகவே கடந்துள்ளது. முதல் முறையாக 18 பேர் போட்டியாளர்களாக சென்றுள்ளதால், போடட்டியாளர்கள் அவர்களின் வாழ்க்கை பற்றி கூறி வருகிறார்கள். ஹவுஸ்மெட்கள் அதை கேட்டு விட்டு லைக், டிஸ்லைக், ஹார்ட் என எமோஜிக்கள் கொடுத்து வருகிறார்கள்.
வழக்கமாக ஒரு சில வாரங்கள் சென்ற பிறகே பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்படும். இந்த முறை முதல் வாரத்திலேயே பரபரப்பை கூட்டி உள்ளனர். திருநங்கையான நமீதா மாரிமத்து, தனது கதையை சொல்லி ஒரே நாளில் போட்டியாளர்கள் மத்தியிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் ஆதரவையும், அனுதாபத்தையும் வென்று, பெரிய ஸ்டார் ஆனார்.
ஆனால் அடுத்த நாளே தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிக்பாஸ் போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதாகவும், மருத்துவ காரணங்களால் அவர் வெளியேறியதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் திடீரென ஒரே வாரத்திலேயே வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. பலர் நமீதாவை மீண்டும் கொண்டு வர சோஷியல் மீடியாக்களில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து பரபரப்புடன் இதற்கு முந்தைய சீசன்களிலும் பலர் வெளியேறி சென்றுள்ளனர். நமீதாவை போல் மிக குறுகிய நாட்களிலேயே அவர்கள் செல்லவில்லை என்றாலும் மிகுந்த பரபரப்பிற்கு பிறகே அவர்கள் வெளியேறி சென்றுள்ளனர். அப்படி சென்ற சில பிரபலங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
முதல் சீசனில் வந்த சில நாட்களிலேயே சக போட்டியாளர்கள் மீது குற்றம்சாட்டி, பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தியவர் பரணி.
பிக்பாஸ் விதிகளை மீறியதால் இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அதே சீசனில் ஆரவ் உடனான காதல், பிறகு மோதலால் நீச்சல் குளத்தில் குதித்து, பாதியிலேயே வெளியேறினார் ஓவியா.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் மிக மோசமாக நடந்து கொண்டதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டவர் மகத் ராகவேந்திரா. மூன்றாவது சீசனில் தமிழ் பெண் அடையாளத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, அங்கு தனது கருத்தை நிலைநிறுத்த கையை கத்தியால் வெட்டிக் கொண்டு, பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஜாங்கிரி மதுமிதா.
இவரைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 ல், தன்னை பற்றிய அறிமுக பேச்சின் போது, பெண்களை இடிப்பதற்காகவே கூட்டமான பஸ்களில் ஏறி இருக்கிறேன் என சரவணன் பேசியது மிகப் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. பெண்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சரவணன் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.