இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை ஜெயித்தாலும் ஒரு ஸ்ட்ரட்டஜியுடன் விட்டுக் கொடுத்த நிரூப் அடுத்த வார தலைவர் போட்டிக்கு நேரடியாக தேர்வாகி உள்ளார்.
நிரூப்பை தொடர்ந்து மேலும், 3 பேரை தலைவர் போட்டிக்காக தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று தேர்வாகி உள்ளனர்.
இந்த வாரம் நிரூப்பை காப்பாற்ற ஐக்கி பெர்ரி கடும் உழைப்பை போட்டு ஜெயிக்க வைத்தார். லக்சரி பட்ஜெட் மதிப்பெண்கள் முழுவதுமே நிரூப்புக்கு தான் என்றும் அதில் வரும் பொருட்கள் அனைத்தையுமே அவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பிக் பாஸ் பணித்தார்.
சரியான ஸ்ட்ராட்டஜியுடன் வாக்குகளையும் ரசிகர்களையும் கவர லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் அதிக அமவுன்ட் வரும்படி செய்து அதனை இழந்தார் நிரூப்.
லக்சரி பட்ஜெட்டை இழந்தாலும் நேரடியாக அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியிட நிரூப் தேர்வாகி உள்ளார். நிரூப் போட்டியில் கலந்து கொள்வது உறுதியாகி விட்ட நிலையில், தேவையில்லாமல் ஏன் மேலும், 3 நபரை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்கிறார் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
இந்த வாரம் முகத்துக்கு நேராக பிரியங்கா பேசினார் என பலரும் அவருக்கு ஓட்டுப் போட அவரும் அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
நிரூப்பை எதிர்த்து பிரியங்கா போட்டி போட்டு ஜெயிப்பாரா? இல்லை வெறும் வாய் மட்டும் தானா? என்பதை வேடிக்கை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே ஒரு முறை கேப்டனாக இருந்த சிபி மீண்டும் ஒரு முறை கேப்டனாக வேண்டும் என ராஜு ஜெயமோகனுடன் கோல் போடும் விளையாட்டில் சூப்பராக விளையாடி வென்ற நிலையில், அவரது தலைவர் பதவியை வருண் தனது காயினை யூஸ் பண்ணி புடுங்கிக் கொண்டார். இந்நிலையில், இந்த வாரமும் சிபி தலைவர் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
நிச்சயம் நிரூப்புக்கு சிபி இந்த முறை டஃப் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. போன வாரமே தலைவராக வேண்டும் என நிரூப் மற்றும் பிரியங்கா வாதாடிய நிலையில், நிரூப், பிரியங்கா, சிபி மற்றும் ஐக்கி பெர்ரி இடையே போட்டி நடைபெற போகிறது.
தனக்காக கடைசி வரை கஷ்டப்பட்டு ஓடி வெற்றியடைய வைத்து இந்த இடத்துக்கு வந்துள்ள ஐக்கி பெர்ரியை அடுத்த வாரம் கேப்டனாக மாற்றி எவிக்ஷனில் இருந்து நிரூப் சேவ் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
35 நாட்கள் டான்ஸ் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த ஐக்கி பெர்ரி பொம்மை டாஸ்க்கில் பட்டையை கிளப்பிய நிலையில், அடுத்த வாரம் கேப்டன் ஆனால், எப்படி வீட்டை வழி நடத்துவார் என்பதையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.