Mon, Dec5, 2022

#Trending

முதலிரவில் மயங்கி கிடந்த புதுப்பெண்! தப்பித்து ஓடிய மாப்பிள்ளை..

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நாகராஜ் – பரமேஸ்வரி தம்பதியிரின் 26 வயது மகள் நளினி என்பவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்து உள்ள தொழுதூரைச் சேர்ந்த 37 வயதான ராஜ்குமார் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 27 ஆம் துதி முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.

இதனையடுத்து, திருமணம் நடந்ததும் அன்றைய தினம் இரவு புதுமன தம்பதியருக்கு மணமகன் வீட்டில் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதன்படி, முதலிரவு அறையில் அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் முதலிரவு அறையில், தனிமையில் இருந்து உள்ளனர்.

அப்போது, மணமகன் ராஜ்குமார் நளினியிடம் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவு வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. இதனால், பயந்து போன அந்த புதுப்பெண் அந்த நள்ளிரவு நேரத்தில் அலறி துடித்து இருக்கிறார்.

இப்படியாக, தொடர்ச்சியாக அந்த புதுப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில், வெளியில் இருந்த மணப்பெண்ணின் உறவினர்கள் பயந்து போய், கதவை தட்டி உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த புதுப்பெண் வலி தாங்க முடியாமல் அந்த முதலரவு அறையிலேயே மயங்கி விழுந்து உள்ளார். இனதால், பயந்து போய் அந்த மாப்பிள்ளை நின்ற நிலையில், அந்த அறையின் கதவை வெளியே நின்றிந்த உறவினர்கள் தொடர்ச்சியாக தட்டிக்கொண்டே இருந்ததால், அவரும் வேறு வழியின்றி கதவை திறந்து உள்ளார்.

அப்போது, கதவை திறந்த வேகத்தில் உள்ளே இருந்த அந்த மணமகன், அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடியிருக்கிறார். எனினும், உறவினர்கள் அந்த அறையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு உடல் முழுவதும் காயங்களுடன் அந்த மணமகள் மயங்கி கீழே கிடந்திருக்கிறார்.

அந்த பெண்ணைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு, அந்த பெண்ணிற்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நளினியின் பெற்றோர் அங்குள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தள்ள மகளிர் போலீசார், தப்பித்து ஓடிய ராஜகுமாரை பிடிக்க அவரை தீவிரமா தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities