மணப்பெண் சந்தித்த அவமானத்தால் வேலையை ராஜினாமா செய்த சம்பவம் ட்ரெண்டாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு மணக்களின் குடும்பத்தினர்கள் உறவினர்கள் நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்துள்ளனர்.
அப்படி இருக்கும்போது தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களை திருமணத்திற்கு அழைத்தால், குடும்பத்தினர்கள் ஏதாவது நினைப்பார்கள் என கருதி இளம் பெண் 70 சக ஊழியர்களை மட்டுமே திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அழைத்து இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, 70 பேருக்கான உணவுகளையும் திருமண நாளில் தயார் செய்து உள்ளார். இந்த நிலையில், திருமண நேரத்தில் 70 ஊழியர்களில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே திருமணத்திற்கு வந்துள்ளார்.
இதனால், மிகுந்த மனவருத்தம் அடைந்த மணப்பெண் மீதி உணவை வீணாக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது குடும்பத்தினர் முன் அவமானத்தையும் சந்தித்த அப்பெண். மறுநாளே நிறுவனத்திற்கு சென்று தனது வேலையை ராஜினாமா செய்யவதாக முடிவெடுத்து கடித்தத்தையும் வழங்கி இருக்கிறார்.
இச்சம்வம் பெரும் பரபரப்பை ஊழியர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. சக பணியாளர்கள் திருமணத்திற்கு வராததால் வேலையை ராஜினாமா செய்த இளம்பெண்ணின் முடிவு குறித்து நெட்டிசன்கள் ட்ரெண்டாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.