தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வரும் போது விபத்து ஏற்பட்ட உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் சகுந்தலா.
இவர் திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி சேர்ந்தவர்.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சகுந்தலாவிற்கும் கதிர்வேலன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து மீண்டும் பணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருவதற்காக திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் நோக்கி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது ரெட்டியார்சத்திரம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கணவர் கதிர்வேலனும், மனைவி சகுந்தலாவும் காயமடைந்தனர். இவர்களை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சகுந்தலா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.