Fri, May7, 2021

குளியல் தொட்டியில் இளம் பெண் பரிதாப மரணம்: எச்சரிக்கை

இளம் பெண் ஒருவர், மின் இணைப்பில் இருந்த மொபைல் போனால், குளியல் தொட்டியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள Gossau பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

22 வயதேயான குறித்த இளம் பெண், வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு சற்று முன்பு, மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக அவசர உதவிக்குழுவினருக்கு உறவினர்களால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர உதவிக்குழுவினர், மருத்துவர் உள்ளிட்டவர்களால், முதலுதவி அளித்தும் குறித்த இளம் பெண்ணை மீட்க முடியாமல் போயுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் குறித்த இளம் பெண், குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, பின்னர் மின் இணைப்பில் இருந்த தமது மொபைலில், அவருக்கு பிடித்தமாக நிகழ்ச்சி ஒன்றை நீராடியபடியே கண்டு களித்திருந்துள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மொபைல் குளியல் தொட்டியில் விழவே, இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், அவசர உதவிக்குழுவினரால் முதலுதவி அளிக்கப்பட்டும் பலனின்றி, மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது, மரணமடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு உளவியல் உதவி அளிக்க மண்டல நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், மின் இணைப்பில் இருக்கும் பொருட்களுடன் குளியல் தொட்டியில் இறங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்