Fri, May7, 2021

கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை பைக்கில் கொண்டு சென்ற அவலம்

இந்தியா ஆந்திராவில் கொரோனா தீவிரப் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் இருந்துள்ளன.

ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண் திங்களன்று கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நோய் தீவிரமடைய மருத்துவமனையிலேயே இறந்து போனார். ஆம்புலன்ஸோ அல்லது வேறு வாகனங்களோ இருந்தால் உடலை ஏற்றிச் சென்று விடலாம் என்று இறந்த பெண்மணியின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.

ஒரு ஆம்புலன்ஸும், வாகனமும் கிடைக்காததால் பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில் உட்காரவைத்தே இடுகாட்டுக்கு உடலைக் கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்