Fri, May7, 2021

தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிர்பெற்ற பெண்… பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சி

இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான லக்ஷ்மி பாய் என்ற பெண், மயங்கிய நிலையில் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் லஷ்மி பாய்க்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது மற்றும் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் லஷ்மிக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது, எனினும், உடல் உறுப்புகளில் எந்த செயல்பாடும் இல்லை என தெரியவந்துள்ளது. இதன் விளைவாக லஷ்மி இருந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குடும்பத்தினர் லஷ்மியின் உடலை கோகுல் நகர் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். அத்துடன், லஷ்மி உடல் வெப்பமாகவே இருந்ததால் குடும்பத்தினர் தகனம் செய்யாமல் காத்திருந்துள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஸ்கரில் கொரோனா பராமரிப்பு மையத்தில் பணியாற்ற வரும் லஷ்மியின் பேத்தி நிதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே மருத்துவரை அழைத்து லஷ்மியை சோதனை செய்ய வைத்துள்ளார், அப்போது லஷ்மிக்கு நாடி துடிப்பு இருந்ததை மருத்துவர் கண்டறிந்துள்ளார்.

ஆக்ஸிஜன் குறைவாக இருந்த லஷ்மி மீண்டும் சுடுகாட்டிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலே அவர் உயிர்பிரிந்துள்ளது.

அலட்சியம் மற்றும் ECG சரியாக செய்யாததே தனது பாட்டியின் மரணத்திற்கு காரணம் என நிதி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்