Fri, May7, 2021

பணம் வாங்கி அரைகுறை ஆடையுடன் காதலியை நிறுத்தி கொடுமைப்படுத்த யூடியூப் பிரபலம்

Stanislav Reshetnikov (30) ரஷ்யாவில் ஒரு யூடியூப் பிரபலம். தனது காதலியை நேரலையில் கொடுமைப்படுத்தி அதற்காக பணம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஒரு நாள் Stanislavவின் காதலியான Valentina ‘Valya’ Grigoryevaவை (28) கொடுமைப்படுத்துவதை தான் பார்க்க விரும்புவதாகக் கூறி, ரசிகர் ஒருவர் Stanislavக்கு 1,000 டொலர் கொடுத்துள்ளார்.

அதன்படி, உறைய வைக்கும் குளிரில், வெறும் உள்ளாடையுடன், கொட்டும் பனியில் Valentinaவை நிறுத்தியுள்ளார் Stanislav. ஆனால், நேரலையிலேயே விழுந்து உயிரை விட்டுவிட்டார் Valentina.

Valentina உயிரிழந்த பிறகும் Stanislav நேரலை ஒளிபரப்பை நிறுத்தவில்லை! அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

உடற்கூறு ஆய்வில், அவர் தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

Stanislavவை விசாரித்தபோது, தான் Valentinaவை பல முறை தலையில் பலமாக தாக்கியதை ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட Stanislavக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

 

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்