Fri, Jul30, 2021
Homeதலைப்பு செய்திபிரபல நடிகர் மீது 20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

பிரபல நடிகர் மீது 20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

பிரித்தானிய தேசிய விருதைப் பெற்ற பிரபல நடிகர் நோயல் கிளார்க் 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக வலம் வருபவர் Noel Clarke.

45 வயதாகும் நோயல் கிளார்க் கிட்டத்தட்ட 30 படங்களில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தொலைகாட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு நிறைந்த நடிகருக்கான பிரித்தானியாவின் தேசிய விருத்தப் பெற்ற நோயல், பாஃப்டா, லாரன்ஸ் ஒலிவியர் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான அந்தஸ்தில் உள்ள இவர் மீது, தற்போது அவருடன் பணியாற்றிய 20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும், நோயல் தங்களை பாலியல் துன்புறுத்தல், தேவையற்ற தொடுதல் உள்ளிட்ட பல வகையில் பாலியல் ரீதியாக முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், நோயல் தன் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச் சாட்டுகளையும் மறுத்துள்ளார்.