Fri, May7, 2021

மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்

உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தமது மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இதனால் நீண்ட 27 ஆண்டு கால திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இது மிகுந்த ஆலோசனைகளுக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு எனவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார்.

தொடர்ந்து, அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.

குறித்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவுடன் நட்பாக பழகிய பில் கேட்ஸ் பின்னர் அந்த உறவு ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்தது.

அதன்பின்னர், கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்