தன்னுடைய பெற்றோரின் சடலங்களை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே வைத்து அதனோடு வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் செயல் அக்கம் பக்கத்தினரை பதற வைத்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பர நகரில் வசித்த ஏ.கே.சவுத்ரி மற்றும் எஸ்.சவுத்ரி என்ற டாக்டர் தம்பதிகள் கடந்த மாதம் அவர்களின் வீட்டில் இறந்து விட்டார்கள்.
அவர்களோடு விவாகரத்து பெற்ற அவர்களின் மகளும் வசித்து வந்தார் . இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
மகளின் இந்த நிலையால் அவரின் பெற்றோர்களும் மன வேதனையில் வீட்டிற்குள்ளேயே இறந்து விட்டார்கள் .
ஆனால் அந்த பெண் தன்னுடைய இறந்து போன பெற்றோரின் உடலை அடக்கம் செய்யாமல் அவர்கள் உயிரோடு இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களுக்கு பணிவிடைகள் செய்து வந்துள்ளார் .
சிலநாட்கள் கழித்து அந்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போயிருக்கின்றனர் .
அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் உறைய செய்துள்ளது. அப்போது அந்த வீட்டின் ஹாலில் பிணங்களை கண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள்.
காவல்துறையினர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று எலும்பு கூடுகளுடன் கூடிய இரண்டு பிணங்களை கைப்பற்றி அவற்றை அடக்கம் செய்து விட்டு அந்த பெண்ணிடம் விசாரித்து வருகிறார்கள் .
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.