Homeமுக்கிய செய்திபிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்த நபர்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி

பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்த நபர்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனை நபர் ஒருவர் பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி மாக்ரோன் தனது இரண்டாம் கட்ட பிரான்ஸ் பிராந்திய சுற்றுப்பயணித்தை மேற்கொண்டு வருகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் கடந்த வாரம் LOT-ல் தொடங்கியது.

இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி இன்று Drome பயணித்தார். Tain-l’Hermitage நகரில் உள்ள ஹோட்டல் பள்ளிக்கு சென்ற போது நபர் ஒருவர் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தார்.

பாதுகாவலர்களுடன் கூடியிருந்த மக்களுக்கு அருகே சென்று பிரான்ஸ் ஜனாதிபதி உரையாடிய போது, திடீரென நபர் ஒருவர் மாக்ரோன் கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.