Homeமுக்கிய செய்திஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்! ஆச்சரிய சம்பவம்!

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்! ஆச்சரிய சம்பவம்!

ஆப்பிரிக்க நாடான மாலியில், நேற்று செவ்வாய்கிழமை 25 வயதாகும் ஹலீமா சிஸே (Halima Cisse) என்ற பெண் ஓரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் மருத்துவர்கள் ஹலீமாவுக்கு சிறப்பு கவனிப்பு தேவை என்று கூறியதையடுத்து, அதிகாரிகள் அவரை மொராக்கோவிற்கு விமானத்தின் மூலம் அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், ஹலீமா சிஸேவின் கர்ப்பப்பையில் 7 குழந்தைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

ஆனால் நேற்று பிரசவத்தின்போது யாருமே எதிர்பாராத விதமாக அவருக்கு கூடுதலாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்தும் சிசேரியன் மூலம் பிறந்துள்ளன.

புதிதாகப் பிறந்த (5 பெண் மற்றும் 4 ஆண்) குழந்தைகள், மற்றும் தாய் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெர்றேடுப்பது மிகவும் அரிதானவை. இந்த வகையான பல பிறப்புகளில் மருத்துவ சிக்கல்கள் அதிகமாக இருக்கும்.